இந்திய கால்பந்து அணியில் இந்திய ராணுவ வீரர் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார்.
இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கேரளத்தைச் சேர்ந்த சுனில் பெஞ்சமின் (32 வயது) முதல்முறையாக இந்திய கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இவர் ஏஆர்எஃப்டி எனப்படும் ஆர்மி ரெட் கால்பந்து அணியில் விளையாடுகிறார்.
சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பைக்கான 35 பேர்கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார்.
இந்திய கால்பந்து அணிக்கு 2005-க்குப் பிறகு முழுநேர பயிற்சியாளராக காலித் ஜமில் நியமிக்கப்பட்டார். அவரும் இதே மாதிரி அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார்.
காலித் ஜமில் புதிய திறமைசாலிகளை கண்டறிவதில் வல்லவராக அறியப்படுகிறார். ஒழுக்கமான, கடினமாக உழைக்கும் அணியை உருவாக்கி வருகிறார்.
டூரண்ட் கோப்பையில் அசத்திய பெஞ்சமினை தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோல், அசிஸ்டென எதுவுமே செய்யாவில்லை, ஐஎஸ்எல் தொடரிலும் விளையாடவில்லை. இருப்பினும் பெஞ்சமினின் ஆட்ட நுணுக்கத்தைப் பார்த்த காலித் ஜமில் அவரைத் தேர்வு செய்துள்ளார்.
சிஏஎஃப்ஏ நேஷன்ஸ் போட்டிகளில் இந்திய அணி ஆக்.29-இல் கஜகஸ்தானையும் ஈரான், ஆப்கானிஸ்தானை செப்.1, செப்.4ஆம் தேதிகளில் எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.