அனில் அம்பானி | இடம்: தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகம் PTI
இந்தியா

வங்கி மோசடி: அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு! சிபிஐ சோதனை

வங்கி மோசடி விவகாரத்தில் அனில் அம்பானி மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

வங்கி மோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மற்றும் அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தில்லியிலிருந்து புறப்பட்ட சிபிஐ அதிகாரிகள் குழு, மும்பையில் உள்ள அனில் அம்பானியின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகிறார்கள். சிபிஐ அதிகாரிகள் வீட்டுக்கு வந்த போது, அனில் அம்பானி, அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வீட்டில் இருந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ஸ்டேட் வங்கியில் அனில் அம்பானி செய்த முறைகேடுகளால் ரூ.2,000 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஸ்டேட் வங்கி புகார் அளித்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மோசடியானது என கடந்த ஜூன் 13ஆம் தேதி அறிவித்திருந்தது.

அதாவது, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை "மோசடி' என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநர் அனில் அம்பானி மீது ரிசர்வ் வங்கியில் எஸ்பிஐ புகாரளித்து, அதன்படி, சிபிஐ இதனை விசாரித்து வருகிறது.

வங்கிக் கடன் மோசடி தொடர்பான விசாரணைக்காக புது தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியிருந்தார் அனில் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசுக்கு ரத்தக் கொதிப்பும், மாநில அரசுகளுக்கு இரத்தச் சோகையும் ஏற்பட்டுள்ளது!-மு.க.ஸ்டாலின் பேச்சு செய்திகள்:சில வரிகளில் | 23.8.25

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 3ஆக உயர்வு

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல்: மயக்கவியல் மருத்துவர் கைது!

வழிகிறேன்... மதராஸி இரண்டாவது பாடல்!

வானம் மெல்ல கீழிறங்கி... பிரனிதா!

SCROLL FOR NEXT