பிகாரின் கத்திஹாரில் உள்ள மக்கானா (தாமரை விதை) விவசாயிகளை மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.
பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை ஆக. 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
அதன் ஒருபகுதியாக, இன்று கத்திஹாரில் உள்ள மக்கானா விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார் ராகுல் காந்தி. விவசாயிகளுடன் தாமரை குளத்தில் இறங்கியும் அங்கு மக்கானா பயிர் நடவு செய்வதை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
பிகாரில் மக்கானா உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவின் மொத்த மக்கானாவில் சுமார் 80 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை பகல்பூரில் நடந்த வாக்காளர் யாத்திரையில் ராகுலுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் கலந்துகொண்டார்.
வரவிருக்கும் தேர்தல் பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கடைசி தேர்தலாக இருக்கும். அவர் மீண்டும் பிகார் முதல்வராக வரமாட்டார். உங்களுக்கு அசல் முதல்வர் வேண்டுமா அல்லது போலி முதல்வர் வேண்டுமா?... நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்று யாதவ் பேரணியில் உரையாற்றினார்.
இதற்கிடையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகஸ்ட் 29 ஆம் தேதி பிகாரில் நடைபெறும் ராகுல் காந்தியின் 'வாக்காளர் அதிகார பேரணியில்' கலந்து கொள்வதாக அறிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ராகுலின் 16 நாள் யாத்திரையின் நோக்கமாகும். 20 மாவட்டங்களில் 1,300 கி.மீ.க்கும் அதிகமான தூரம் பயணிக்கும் இந்த யாத்திரை செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நிறைவடைகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.