மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது: “மதுபான ஊழலில், சைதன்ய பகேலுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸாரால் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.
அதனைத்தொடர்ந்து, இன்று(ஆக. 23) ராய்பூரிலுள்ள நீதிமன்றத்தில் முறையிடுகையில், அவரை 14 நாள் விசாரிக்க அமலாக்கத்துறையால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப். 6-ஆம் தேதி நடைபெறும். இதுவரை சைதன்ய பகேல் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவே இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.