வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!
ஹைதராபாத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம்...
ஹைதராபாத்: வாக்குத் திருட்டு விவகாரத்தில் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் இன்று(ஆக. 23) ஈடுபட்டனர்.
கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாக குற்றஞ்சாட்டியுள்ள பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் சென்று சேர்க்கும் விதமாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ள தெலங்கானாவில் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் ஹைதராபாத் மாநகரில் ஆம்பெர்பேட் பகுதியில் காங்கிரஸார் பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் அக்கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் இன்று ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
Congress takes out door-to-door campaign, accuses BJP of "vote theft" during elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.