ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் 339 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேசத்தின், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. பருவமழை தொடங்கியது முதல் கடுமையான மழைப் பொழிவை எதிர்கொண்டு வரும் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் ஆக.24 முதல் ஆக.26 ஆம் தேதி வரை கனமழைக்கான ”மஞ்சள் அலரட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்பட 339 முக்கிய சாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மண்டி மாவட்டத்தில் 162 சாலைகளும், குல்லுவில் 106 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலை 305-ம் தற்காலிகமாக மூடப்படுவதாக, ஹிமாசலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல், ஹிமாசலில் பெய்து வரும் பருவமழையின் தாக்கத்தால் இதுவரை 75 திடீர் வெள்ளம், 39 மேகவெடிப்புகள் மற்றும் மிகப் பெரியளவிலான 74 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், 151 பேர் பலியானதுடன், 37 பேர் மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.