ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது.
தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின்னர் அவற்றின் சில பாகங்களை வீட்டில் விட்டு விட்டு மற்றவையை முசி ஆற்றில் வீசியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்டவர் தனது உறவினரிடம் சனிக்கிழமை இரவு தெரிவித்திருக்கிறார்.
அவர் உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சில உடல் பாகங்களை வீட்டில் கண்டெடுத்தனர்.
அதைத்தொடர்ந்து, இச்சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியையும் அவர்கள் தேடி வருகின்றனர்.
விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினர் கடந்த ஒரு மாதமாக மெடிபள்ளியில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக போலீஸார் மேலும் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.