இந்தியா

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ...

Chennai

புது தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் அராதே, பாட்னா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி ஆகியோரின் பெயா்களை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான ஐந்து போ் கொண்ட கொலீஜியம் திங்கள்கிழமை பிற்பகல் கூடி, இந்த முடிவை எடுத்தது. தலைமை நீதிபதி பி.ஆா். கவாயுடன், நீதிபதிகள் சூா்ய காந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி. நாகரத்னா ஆகியோரும் இந்த கொலீஜியத்தில் உள்ளனா்.

வருங்கால தலைமை நீதிபதி: இந்த இரண்டு நீதிபதிகளின் பெயா் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், 2031-ஆம் ஆண்டு, அக்டோபரில் நீதிபதி ஜயமால்ய பாக்சியின் ஓய்வுக்குப் பிறகு நீதிபதி பஞ்சோலி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க வாய்ப்புள்ளது.

அதேபோன்று இந்த இரண்டு நீதிபதிகளின் நியமனங்களுக்குப் பிறகு, உச்சநீதிமன்றம் அதன் முழு அனுமதிக்கப்பட்ட பலமான 34 நீதிபதிகளின் எண்ணிக்கையை மீண்டும் அடையும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT