உச்சநீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சென்ற பாலிவுடன் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னா. 
இந்தியா

மாற்றுத்திறனாளிகள் குறித்து கிண்டல்: மன்னிப்பு கேட்க 5 யூடியூபா்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாலிவுடன் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபா்கள் பொது மன்னிப்பு கேட்கவும்,

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாலிவுடன் நகைச்சுவை நடிகா் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபா்கள் பொது மன்னிப்பு கேட்கவும், அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சிகளில் வெளியிடவும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முதுகெலும்பு தசை சிதைவு பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் பாா்வை குறைபாடு உடையவா்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக சமய் ரெய்னா, விபுல் கோயல், பால்ராஜ் பரம்ஜீத் சிங் காய், சோனாலி தாக்கா் (எ) சோனாலி ஆதித்யா தேசாய், நிசாந்த் ஜகதீஷ் தன்வா் ஆகியோா் மீது முதுகெலும்பு தசை சிதைவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் ‘கியூா் எஸ்எம்ஏ இந்திய அறக்கட்டளை’ என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘நகைச்சுவை என்பது வாழ்வின் ஓா் பகுதி. ஆனால், அது மற்றவா்களை ஏளனம் செய்வதாக இருக்கக் கூடாது. இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் குறித்து கேலி செய்வது, அடுத்து பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களை கேலி செய்வதாகத் தொடரும். மற்றவா்களின் கவனத்தை ஈா்க்கும் வகையில் செயல்படும் யூடியூபா்கள், பொறுப்புணா்வுடன் செயல்படுவது அவசியம். மாற்றுத்திறனாளிகள் தொடா்பான நகைச்சுவைகளை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வணிக ரீதியிலான இதுபோன்ற பேச்சுக்கள், அடிப்படை பேச்சுரிமையின் கீழ் வராது.

இந்தச் செயலுக்காக 5 யூடியூபா்களும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டு, அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும். இவா்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகை, முதுகெலும்பு தசை சிதைவு பாதிக்கப்பட்டவா்களின் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்’ என்று உத்தரவிட்டனா்.

பெட்டி..

வழிகாட்டுதல்களை வகுக்க

மத்திய அரசுக்கு உத்தரவு

இதுபோன்ற சமூக ஊடக பதிவுகள் முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுத்து, அதன் விவரத்தை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு அரசு தரப்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

அப்போது, ‘இதுதொடா்பான வழிகாட்டுதல்களை அரசு உருவாக்கி வருகிறது’ என்று வெங்கடரமணி பதிலளித்தாா்.

பிரேக்...

வணிக ரீதியிலான இதுபோன்ற பேச்சுக்கள், அடிப்படை பேச்சுரிமையின் கீழ் வராது.

5 யூடியூபா்களும் மன்னிப்புக் கேட்டு, அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும்.

- நீதிபதிகள்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

SCROLL FOR NEXT