குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்து இஸ்லாமிய பெண் ரீல்ஸ் எடுத்த நிலையில், பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு புனிதத்தன்மையை மீட்கும் பரிகார பூஜை நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலின் குளத்தில் கால்களை நனைத்து ரீல்ஸ் எடுத்த விடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தனது விடியோவை நீக்கிய ஜாஸ்மின் ஜாஃபர், மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்த நிலையில், கோயில் கட்டுப்பாடுகளை மீறி குளத்தின் புனிதத்தை ஜாஸ்மின் ஜாஃபர் அசுத்தம் செய்துவிட்டதாக கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
மேலும், இன்று (ஆக. 27) பிற்பகல் 1 மணிவரை கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு, குளத்தின் புனிதத்தன்மையை மீட்க பரிகார பூஜை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூஜைகள் தொடர்ந்து 6 நாள்கள் நடத்தப்படும் என்றும் கட்டுப்பாடுகளுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, கோயிலில் தடை செய்யப்பட்ட பகுதியான குளத்தில் கேரள உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் ஜாஃபருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.