தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்க வேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகளை முதல்வர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுடன் இணைந்து கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தலைநகரில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முக்கியமாக பள்ளிப் பேருந்துகள் ஒரு பெரிய பிரிவை உருவாக்குகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் தில்லி சாலையில் செல்கின்றன.
தில்லி போக்குவரத்துக் கழகத்துடன் சர்தார் படேல் வித்யாலயாவுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். மேலும் மாணவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் குளிரூட்டப்பட்டவை மற்றும் வசதியானவை என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.