பணத்தை எடுக்கும் மக்கள்.  Photo credit: x
இந்தியா

உ.பி.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை தூக்கிச்சென்ற குரங்கு !

நிலப் பத்திரப் பதிவுக்காக இருசக்கர வாகத்தில் விவசாயி வைத்துச்சென்ற பண பையை குரங்கு எடுத்துச்சென்றதால் பரபரப்பு நிலவியது.

இணையதளச் செய்திப் பிரிவு

நிலப் பத்திரப் பதிவுக்காக இருசக்கர வாகத்தில் விவசாயி வைத்துச்சென்ற பண பையை குரங்கு எடுத்துச்சென்றதால் பரபரப்பு நிலவியது.

உத்தரப் பிரதேச மாநிலம், டோண்டாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரோஹிதாஷ் சந்திரா. இவரது மகன் அனுஜ் குமார். கடந்த செவ்வாய்கிழமை இருவரும் நிலப் பத்திரப் பதிவுக்காக பிதுனா வட்டாச்சியர் அனுலுவலகம் சென்றுள்ளனர்.

ரோஹிதாஷ், தான் எடுத்து வந்த ரூ.80,000 பணத்தை பை ஒன்றில் இருசக்கர வாகனத்தில் வைத்திருக்கிறார். பின்னர் அவர் வழக்கறிஞர் கோவிந்த் துபேவுடன் வட்டாச்சியர் வளாகத்தில் பத்திரப் பதிவு தொடர்பான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். ​​

செப். 9-ல் ஐஃபோன் 17 அறிமுகம்! விலை குறையும் பழைய ஐஃபோன் மாடல்கள்!!

அப்போது அங்கிருந்த குரங்கு ஒன்று இருசக்கர வாகனத்தில் இருந்த பண பையை தூக்கிக்கொண்டு மரத்தின் மீது ஏறிவிட்டது. தொடர்ந்து அந்த குரங்கு பையில் இருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து ஒவ்வொன்றாக வீசத் தொடங்கியிருக்கிறது.

இதையடுத்து, சிதறிய பணத்தை திருப்பித் தருமாறு மக்களிடம் ரோஹிதாஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரால் ரூ.52,000 மட்டுமே பெற முடிந்தது. அதே நேரத்தில் ரூ. 28,000 இன்னும் காணவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவை குரங்கால் கிழிக்கப்பட்டதோடு அங்கிருந்த மக்களாலும் எடுத்துச்செல்லப்பட்டன.

A local farmer carrying money in a bag had come to the Bidhuna Tehsil office for property registration when a monkey snatched his bag and climbed a tree.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலர் சூட்டும்... சுவாதி கொண்டே

செங்குயிலே... சாந்தினி தமிழரசன்

மும்ப்ராவில் பையில் கண்டெடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் !

ஒவியம்... தீப்ஷிகா!

உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி

SCROLL FOR NEXT