பிரதமர் மோடி 
இந்தியா

ஜப்பான் தொழில்நுட்பம் - இந்திய திறமை இணைந்தால் தொழில்நுட்ப புரட்சி: பிரதமர் மோடி

ஜப்பான் தொழில்நுட்பம் - இந்திய திறமை இணைந்தால் தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கலாம் என பிரதமர் மோடி கூறினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

டோக்கியோ: ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை வழிநடத்த முடியும் என்று ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா-ஜப்பான் 15-ஆவது ஆண்டு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், இன்று, இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. மிக விரைவில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறப் போகிறது. ஜப்பானின் அறிவும், இந்தியாவின் திறமையும் இணைந்து மிகச் சிறந்த கூட்டாண்மையை உருவாக்க முடியும்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான, செயற்கை நுண்ணறிவு, செமிக்ன்டக்டர், குவாண்டம் கணினி, உயிரி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியவற்றில் இந்தியா மிகச் சவாலான மற்றும் லட்சிய முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஜப்பானிய வணிகத்தை தெற்கு உலகிற்கு கொண்டு வருவதற்கான ஊக்கியாக இந்தியா இருக்கும். இந்தியாவும் ஜப்பானும் இணைந்து ஆசிய நாடுகளின் இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கானதாக மாற்றும்.

ஏற்கனவே, இந்தியாவும் ஜப்பானும் இணைந்து, ரோபோடிக்ஸ், செமிகன்டக்டர், கப்பல் கட்டுதல் மற்றும் அணுசக்தி துறைகளில் வெற்றிகரமான ஆட்டோமொபைல் கூட்டாளிகளாக செயல்பட்டு வெற்றிநடை போடுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிதம்பரம் பள்ளி மாணவி சதுரங்க போட்டியில் முதலிடம்

மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

கோனேரிப்பட்டியிலிருந்து வேளாங்கண்ணிக்கு 200 போ் பாதயாத்திரை

மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 - புகைப்படங்கள்

கெங்கவல்லியில் 11கைப்பேசிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT