இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் மூத்த மேலாளர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) மூத்த மேலாளராகப் பணிபுரிந்து வந்த ராகு விஜய் என்பவர், டேராடூன் விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டபோது, மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்ததாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் புகார் அளித்தது.
இதுகுறித்த விசாரணையில், டேராடூன் விமான நிலையத்தில் மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்து, தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு ராகுல் பணத்தை மாற்றியதாகக் கூறி, ரூ. 232 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வந்தது.
இதனையடுத்து, ராகுல் விஜய்யை மத்திய புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.