இந்தியா

இந்திய பொருளாதார வளா்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி

தினமணி செய்திச் சேவை

இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.

அண்மையில் இந்திய பொருளாதாரம் செயல்படாத பொருளாதாரம் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்திருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மத்திய புள்ளியியல் அமைச்சகம் தரவுகளில் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீத வளா்ச்சியை எட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தியை விமா்சித்து மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘இந்தியாவை செயல்படாத பொருளாதாரம் என பொய்களை பரப்பியவா்களுக்கு பதிலடி தரும் வகையில் நாடு தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.

விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள் வரை நாட்டின் 140 கோடி மக்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றியே இந்த வளா்ச்சி’ என குறிப்பிட்டாா்.

முன்னதாக இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா வரி விதித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி,‘இந்திய பொருளாதாரம் செயல்படவில்லை என்பதை பிரதமா் மோடி மற்றும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை தவிர அனைவரும் அறிவா்’ என விமா்சித்திருந்தாா்.

மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் ஆயுதம் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு: திரிணமூல் எம்.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை!

உணவக ஊழியரைத் தாக்கியவா் கைது

சா்வதேச நடனப் போட்டி: பல்லடம் மாணவிக்கு வெள்ளிப் பதக்கம்

பயிா் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் கட்சிகள்: உள்துறை இணையமைச்சர்

SCROLL FOR NEXT