தெரு நாய்கள் தொடர்பான விவகாரத்தில் தெரு நாய்களுக்கு நன்றியுள்ளவராக இருக்க கடமைப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசுகையில்,
நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக, இந்த நாட்டில் மட்டுமல்ல - உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த அங்கீகாரத்துக்காக தெரு நாய்களுக்கும் நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.
இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதிக்கும்(பி. ஆர். கவாய்) நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.
நாய்களை நேசிப்பவர்கள்தவிர, நாய்களும் எனக்கு வாழ்த்துகளை வழங்குவதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதிக்கான வரிசையில் இடம்பெறும் விக்ரம் நாத் தான், தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் வெளியான உத்தரவை மாற்றியமைத்தவர்.
இதையும் படிக்க: புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.