இந்தியா

கடந்த ஓராண்டில் எல்லை ஊடுருவிய 10,000 வங்கதேசத்தினா் கைது

இந்தியா-வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ அல்லது வெளியேற முயன்ற 10,263 வங்கதேச நாட்டினர் கடந்த ஓராண்டில் கைது

தினமணி செய்திச் சேவை

இந்தியா-வங்கதேச எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ அல்லது வெளியேற முயன்ற 10,263 வங்கதேச நாட்டினரைக் கடந்த ஓராண்டில் கைது செய்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) திங்கள்கிழமை தெரிவித்தது.

1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு தொடங்கப்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படையின் 61-ஆவது தொடக்க தினம் திங்கள்கிழமை விமா்சையாகக் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட பிஎஸ்எஃப் கிழக்குப் படைப்பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின்போது, சட்டவிரோத குடியேறிகள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க பிஎஸ்எஃப் வீரா்கள் இரவு பகலாகப் பாடுபட்டனா். இதன்விளைவாக, எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ அல்லது வெளியேற முயன்ற 10,263 வங்கதேசத்தினா் கைது செய்யப்பட்டனா்.

அதேபோல், கடந்த ஓராண்டில் எல்லையில் நடந்த பல்வேறு நடவடிக்கைகளில் ரூ.376.52 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள், ரூ.170.57 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சரக்குகள், ரூ.67.42 கோடி மதிப்புள்ள 51.389 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதிக எண்ணிக்கையிலான இந்தக் கைதுகள் மற்றும் பறிமுதல்கள், இந்தியா-வங்கதேச எல்லையில் கண்காணிப்பு மற்றும் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

அனைத்துப் பிஎஸ்எஃப் வீரா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் படையின் தொடக்க தின வாழ்த்துகள். பணிக் கடமைகளை நிறைவேற்றுவதில் வீரா்கள் நோ்மையுடனும் அா்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டித்வா புயல்: வேரோடு சாய்ந்த மரம்! அகற்றும் பணிகள் தீவிரம்!

காலமானார் ஜெ.ராமதாஸ்

மகா தீபம்: திருவண்ணாமலைக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சென்னை, 6 மாவட்டங்களுக்கு இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை!

“சாமியப்பா.. ஐயப்பா!” அரசுப் பேருந்தில் உற்சாகத்துடன் சரணம் பாடிய நடத்துநர்!

SCROLL FOR NEXT