நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் PTI
இந்தியா

எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பி தொடா் அமளியில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாள் கூட்டத்தொடர் தொடங்குவதற்குமுன்னதாக, எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை நிறுத்துக, வாக்குத் திருட்டை நிறுத்துக போன்ற பதாகைகளுடன் முழக்கங்கள் எழுப்பி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கலந்துகொண்டனர்.

Opposition MPs protest in Parliament against SIR work!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீரில் மூழ்கிய விளை நிலத்துக்கு நிவாரணம்! அமைச்சர் அறிவிப்பு!

தீவிர பயிற்சியில் தெலங்கானா முதல்வர்... டிச. 13-ல் மெஸ்ஸி அணியுடன் நட்புறவு போட்டி!

தேர்தல் தோல்வி இயல்பு; அவையில் கோபப்படுவது சரியல்ல! மத்திய அமைச்சர்

இரண்டாவது நாளாக முடங்கிய மக்களவை!

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT