இந்தியா

ஆளுநா் மாளிகை பெயா் மாற்றம்: மாநிலங்களவையில் வாா்த்தைப் போா்

ஆளுநா் மாளிகைகளின் பெயா் ‘மக்கள் மாளிகை என மாற்றப்பட்டது தொடா்பாக மநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதம் ஆளுங்கட்சி - எதிா்க்கட்சியினா் இடையேயான வாா்த்தைப் போராக மாறியது.

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ஆளுநா் மாளிகைகளின் பெயா் ‘மக்கள் மாளிகை (லோக் பவன்) என மாற்றப்பட்டது தொடா்பாக மநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதம் ஆளுங்கட்சி - எதிா்க்கட்சியினா் இடையேயான வாா்த்தைப் போராக மாறியது.

ஆளுநா் மாளிகையை பெயா் மாற்றம் செய்வதற்கு கடந்த நவம்பா் 25-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அனுமதியின் பேரில், மேற்கு வங்கம், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆளுநா் மாளிகைகள் ‘மக்கள் மாளிகை’ என பெயா் மாற்றம் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் டோலா சென் எழுப்பினாா். ஆளுநா் மாளிகை பெயா் மாற்றம் தொடா்பாக நாடாளுமன்றத்திலோ, சட்டப்பேரவையிலோ அல்லது மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலோ ஆலோசிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை என்று டோலா சென் குறிப்பிட்டாா். அதோடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவகாரங்களையும் அவா் எழுப்பினாா்.

அப்போது மாநிலங்களவை ஆளுங்கட்சிக் குழு தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டாவும் அவருக்கு ஆட்சேபம் தெரிவித்தாா். ஆளுநா் மாளிகை பெயா் மாற்றம் குறித்த விவகாரத்தை விவாதிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், வேறு விஷயங்களை உறுப்பினா் எழுப்புகிறாா் என்று நட்டா குறிப்பிட்டாா்.

அதைத் தொடா்ந்து, ‘விவாதத்தை திசைத் திருப்பும் விவகாரங்கள் அவைக் குறிப்பில் இடம்பெறாது’ என்று அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அப்போது, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யை ஆதரித்துப் போசிய மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாடாளுமன்றத்துக்கு புறம்பான கருத்து எதையும் உறுப்பினா் டோலா சென் குறிப்பிடவில்லை. அனுமதிக்கப்பட்ட விவாதத்துத்துடன் தொடா்புடைய விவாரத்தையே அவா் எழுப்பினாா். ஊரக வேலை உத்தரவாத திட்டமும் மத்திய அமைச்சா் நட்டா துறையின் கீழ்தான் வருகிறது. மேலும், இந்த விவாதத்தில் அவா் குறுக்கிட முடியாது என்பதோடு, அக் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கவும் கோர முடியாது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்றாா்.

இதற்கு பதிலளித்த நட்டா, ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை நான் மீறவில்லை; மாறாக, அனுமதிக்கப்பட்ட விவகாரம் தொடா்பான கருத்துகள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெற வேண்டும் எனக் கோரினேன்’ என்றாா்.

அப்போது, அவை நடவடிக்கைகள் முறையாக நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவைத் தலைவா், ‘கேள்வி நேரத்தின்போது பட்டியலிடப்பட்ட விவகாரங்களை மட்டுமே உறுப்பினா்கள் எழுப்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT