இண்டிகோ நிறுவன சேவையில் இடையூறு ஏற்பட்டதையொட்டி அதன் தலைமைச் செயல் அதிகாரி எல்பர்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தொடர்ந்து நான்காவது நாளாக இண்டிகோ விமான சேவை வெள்ளிக்கிழமையும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 400க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானப் பணியாளா்களுக்கு குறிப்பாக விமானிகளுக்கு குறிப்பிட்ட ஓய்வு அளிக்கும்பொருட்டு ‘விமானப் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிகளை’ (எஃப்டிடிஎல்) மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன்படி, விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் உள்பட நாளுக்கு 8 மணி நேரம், வாரத்துக்கு 35 மணி நேரம், மாதத்துக்கு 125 மணி நேரம், ஆண்டுக்கு 1,000 மணி நேரம் மட்டுமே பணி நேரமாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இண்டிகோ நிறுவனத்தில் போதிய விமானிகள் எண்ணிக்கை இல்லாததால் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாள்களாக பாதிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டும் வருகின்றன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குவிந்துள்ள இண்டிகோ விமானப் பயணிகளால் அசாதாரண சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவன சேவையில் இடையூறு ஏற்பட்டதையொட்டி அதன் தலைமைச் செயல் அதிகாரி எல்பர்ஸ் காணொளி மூலம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த சில நாட்களாக எங்களின் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இன்று மட்டும் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான சேவை முழுவதுமாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப 5 முதல் 10 நாள்கள் வரை ஆகும் என்று எதிர்பார்க்கிறோம். சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்படும் விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.