தில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினார்.
23-ஆவது இந்திய - ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் வியாழக்கிழமை மாலை இந்தியா வந்தாா். தில்லி பாலம் விமான நிலையத்தில் புதினை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி, தனது இல்லத்தில் அவருக்கு இரவு விருந்தளித்தார்.
இன்று நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, படை வீரர்களின் மரியாதையை புதின் ஏற்றுக்கொண்டார்.
பின்னர், தில்லி ராஜ பாதையில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்ற புதின், மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் புதின் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, ஹைதராபாத் மாளிகைக்குச் சென்ற புதின், பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்று, முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.