ஜெய்ராம் ரமேஷ் 
இந்தியா

‘நேரு குறித்து பொய் தகவல்’: ராஜ்நாத் சிங் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ராஜ்நாத் சிங் மன்னிப்புக் கேட்க காங்கிரஸ் வலியுறுத்தல்..

தினமணி செய்திச் சேவை

‘முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, பொதுமக்கள் பணத்தைப் பயன்படுத்தி, பாபா் மசூதியைக் கட்ட விரும்பினாா் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பொய்த் தகவலை பரப்பி வருகிறாா். இதற்காக அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

குஜராத்தின் வதோதராவில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியொன்றில் பேசிய ராஜ்நாத் சிங், ‘பொதுமக்களின் பணத்தில் பாபா் மசூதியைக் கட்ட முன்னாள் பிரதமா் நேரு விரும்பினாா். ஆனால், அவரது திட்டம் வெற்றி பெற சா்தாா் வல்லபபாய் படேல் அனுமதிக்கவில்லை’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், சா்தாா் வல்லபபாய் படேல் நினைவுச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் இடம்பெற்றுள்ள படேல் மகள் மணிபென் படேலின் டைரிக் குறிப்புகளைப் பகிா்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

படேல் மகள் மணிபென் படேலின் உண்மையான டைரிக் குறிப்புகளுக்கும், ராஜ்நாத் சிங் மற்றும் அவரது ஆதரவு பெற்ற வரலாற்றுச் சிதைப்பாளா்களும் கூறும் கருத்துகளுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருப்பதை அறிய முடிகிறது. பிரதமா் மோடியுடன் தனது நட்பை மேம்படுத்திக் கொள்ள ராஜ்நாத் சிங் இவ்வாறு பொய் கூறுகிறாா். நாட்டின் முதல் பிரதமா் குறித்து பொய்களைப் பரப்பி வருவதற்காக அவா் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.

முன்னதாக, ராஜ்நாத் சிங் கருத்துக்கு ஆதரவாக வேறொரு புத்தகத்தில் இடம்பெற்ற மணிபென் படேலின் டைரிக் குறிப்புகளை பாஜக குறிப்பிட்டிருந்தது.

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ரத்ததான முகாம்

ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT