பணிநேரத்துக்குப் பின்னர் அலுவலக அழைப்புகளுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்ற மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் முதல் தேதியில் தொடங்கிய நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவை கூட்டத்தொடரில் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) எம்.பி. சுப்ரியா சூலே தனிநபர் மசோதா தாக்கல் செய்தார்.
ஊழியர்கள் நலன்சார்ந்த இந்த மசோதாவின் நோக்கம், `பணிநேரத்துக்குப் பின்னரும் அலுவலகங்களிலிருந்து பெறப்படும் பணி தொடர்பான அழைப்புகளுக்கோ மின்னஞ்சல்களுக்கோ பதிலளிக்க வேண்டாம் என்பது உறுதி செய்யப்படும்’ என்று கூறுகிறது.
அலுவலகங்களிலோ பணியிடங்களிலோ வேலைமுடிந்து வீட்டுக்குச் சென்ற பின்னரும் அல்லது விடுமுறை நாள்களில்கூட பணி தொடர்பான அழைப்புகளால் ஊழியர்கள் சிரமப்படுவதுடன் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், இதனை முற்றுக்குக் கொண்டுவர தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டுமானால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதல் பெற வேண்டும். தனிநபர் மசோதாக்கள் பெரும்பாலும் நிறைவேற்றப்படாது என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பாபர் மசூதி இடிப்பு: அயோத்தி, மதுராவில் பாதுகாப்பு அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.