தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தனது அரசின் உறுதிப்பாட்டை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மீண்டும் வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி,
மாநிலத்தில் சீரான சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது உள்பட பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்த முழு நேர்மையுடனும் பொறுப்புடனும் தனது நிர்வாகம் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
சார் தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர், இந்தாண்டு புனித யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் எங்கள் அரசு மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றி வருகின்றது. தேர்தலுக்கு முன்பு சீரான சிவில் சட்டம் பற்றி பொதுமக்களுக்கு நாங்கள் வாக்குறுதி அளித்திருந்தோம். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளோம்.
இந்து முறை சார்தாம் யாத்திரைக்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளோம். பக்தர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் இதற்கான வசதிகளை மேம்படுத்தியுள்ளோம்.
மேலும், விவசாயத் துறைக்கான நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர், வரவிருக்கும் அறுவடை மற்றும் கொள்முதல் சுழற்சிக்கு அரசு முழுமையாக ஆதரவளிக்கும் என்று கரும்பு விவசாயிகளுக்கு முதல்வர் தாமி உறுதியளித்தார்.
வெள்ளிக்கிழமை முன்னதாக, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மூலிகை ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் தாமி, கிராம அளவிலான குழுக்களை உருவாக்குவதன் மூலம் மூலிகைத் துறையில் முறையாகப் பணியாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.