பாபர் மசூதி இடித்து 33வது ஆண்டு நிறைவையொட்டி உத்தரப் பிரதேசத்தின் மதுரா. அயோத்தி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு நாளான டிசம்பர் 6- ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் கருப்பு நாளாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்தவகையில் கிருஷ்ண ஜென்மபூமியில் உள்ள ஷாஹிஇத்கா மசூதி பாதுகாப்பு வளைத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதுதொடர்பாக மதுரா காவல் கண்காணிப்பாளர் அவ்னிஷ் மிஸ்ரா கூறுகையில்,
நகரம் முழுவதும் பல இடங்களில் முழுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன, மேலும் எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தடுக்க படைகள் முழு உஷார் நிலையில் உள்ளன.
சரியான அடையாள அட்டை இல்லாதவர்கள் நகரத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் படைகள் முழுவதும் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. சந்தேக நபர்களிடம் அனைத்து தகவல்களும் சரிபார்க்கப்படுகின்றன. நகரம் முழுவதும் இயல்பான நிலை காணப்படுகிறது.
அனைத்து முக்கிய இடங்களிலும் கொடி அணிவகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும், முக்கிய இடங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அயோத்தி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பிற மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர், முழுமையான வாகன மற்றும் அடையாள சோதனைகளை மேற்கொள்கின்றனர்.
அதேபோன்று ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்க: நலன் குமாரசாமி - கார்த்தியின் வா வாத்தியார் டிரைலர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.