தலைநகர் தில்லியில் மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு தில்லியில், லட்சுமி நகரில் உள்ள தனியார்ப் பள்ளியில் இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்று காலை 10.40 மணியளவில் லவ்லி பப்ளிக் பள்ளிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் அழைப்பு வந்தது. இதையடுத்து அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
உடனடியாக உள்ளூர் காவல்துறை, தில்லி தீயணைப்புத் துறை மற்றும் அவசரக்கால நிறுவனங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு அகற்றும் படைகள், நாய் படைகள் மற்றும் காவல் குழுக்கள் விரைந்தன.
வளாகம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கையாக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வரை சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
அதோடு, மேலும் இரண்டு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 40 நாள்களில் 4வது முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்தனர். நேற்று நடைபெற வேண்டிய வழக்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சென்னையில் 14 இண்டிகோ விமானங்கள் இன்றும் ரத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.