யுனெஸ்கோ பட்டியலில் இணைந்த தீபாவளி  
இந்தியா

யுனெஸ்கோ கலாசார பட்டியலில் தீபாவளி பண்டிகை!

யுனெஸ்கோ பட்டியலில் இணைந்த தீபாவளி பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

யுனெஸ்கோ அமைப்பின் கலாசார பராம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்க்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள செங்கோட்டையில் யுனெஸ்கோவின் முக்கிய கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின்போது யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் ஹிந்துக்களின் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பதவிக் காலத்தில் இந்தியாவின் கலாசார பாரம்பரியங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தீபாவளி ஒளியின் பண்டிகை. இந்தியாவின் காலத்தால் அழியாத பண்டிகைகளில் ஒன்றாகும். இது இப்போது உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு இந்தியருக்கும் தீபாவளி பண்டிகையை ஆழ்ந்த உணர்ச்சியையும், தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படுகிறது. தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச்செல்ல இந்த கௌரவம் உதவுகிறது இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஷேகாவத் மற்றும் இந்தியக் குழுவினர் பாரம்பரிய தலைக்கவசத்தை அணிந்திருந்தனர். யுனெஸ்கோ குழுவின் கூட்டத்தை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

கும்பமேளா, கொல்கத்தாவின் துர்கா பூஜை, குஜராத்தின் கர்பா நடனம், யோகா, வேத மந்திரங்களின் பாரம்பரியம் மற்றும் ராமாயண காவியத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ராம்லீலா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டவைகள் ஏற்கெனவே யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

India on Wednesday said that with the inscription of Deepavali on intangible cultural heritage list, UNESCO has honoured the eternal human longing for renewal, peace and the triumph of good.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம்!

சண்முக பாண்டியனின் கொம்புசீவி வெளியீட்டுத் தேதி!

பளிச்... ஷனாயா கபூர்!

அடிலெய்டு டெஸ்ட்டில் பாட் கம்மின்ஸ்..! 15 பேர் கொண்ட ஆஸி. அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT