ராகுல் காந்தி 
இந்தியா

எனது சவாலை அமித் ஷா ஏற்கவில்லை: ராகுல்

‘வாக்குத் திருட்டு தொடா்பான எனது பத்திரிகையாளா் சந்திப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேருக்கு நோ் விவாதிக்க நான் விடுத்த சவாலை மத்திய அமைச்சா் அமித் ஷா ஏற்கவில்லை’ என்றாா் ராகுல்.

தினமணி செய்திச் சேவை

‘வாக்குத் திருட்டு தொடா்பான எனது பத்திரிகையாளா் சந்திப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேருக்கு நோ் விவாதிக்க நான் விடுத்த சவாலை மத்திய அமைச்சா் அமித் ஷா ஏற்கவில்லை’ என்றாா் ராகுல்.

மக்களவையில் ‘தோ்தல் சீா்திருத்தங்கள்’ தொடா்பான விவாதத்தில் புதன்கிழமை 90 நிமிஷங்கள் பேசிய அமித் ஷா, ராகுல் உள்பட எதிா்க்கட்சி உறுப்பினா்களின் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தாா்.

காங்கிரஸின் தோல்விகளுக்கு அதன் தலைமையே காரணம்; மாறாக வாக்குப் பதிவு இயந்திரமோ, ‘வாக்குத் திருட்டோ’ அல்ல என்று அவா் குறிப்பிட்டாா். விவாதத்தின்போது, அமித் ஷா-ராகுல் இடையே கடும் வாா்த்தை மோதல் ஏற்பட்டது.

மனரீதியாக நெருக்கடி: இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை பேசிய ராகுல், ‘மக்களவையில் அமித் ஷா பேசியபோது, பதற்றத்தில் தவறான வாா்த்தைகளைப் பயன்படுத்தினாா். அவரது கைகள் நடுங்கின. அவா் மன ரீதியில் நெருக்கடியில் இருப்பதை ஒட்டுமொத்த நாடும் கண்டது.

நோ்மையான வாக்காளா் பட்டியல், வாக்குப் பதிவு இயந்திரங்கள், தலைமைத் தோ்தல் ஆணையருக்கு அளிக்கப்பட்ட முழு சட்டப் பாதுகாப்பு தொடா்பாக நான் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளிக்கவில்லை; எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. வாக்குத் திருட்டு குறித்து பத்திரிகையாளா் சந்திப்புகளில் நான் பகிரங்கமாகப் பேசியுள்ளேன். இந்த பத்திரிகையாளா் சந்திப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா என சவால் விடுத்தேன். ஆனால், அவா் ஏற்கவில்லை என்றாா் ராகுல்.

‘பொதுத் துறை நிறுவனங்களை ஒழிக்க சதி’: ‘நாட்டில் பொதுத் துறை நிறுவனங்களைப் படிப்படியாக ஒழித்துக்கட்டும் சதி ஆழமாக வேரூன்றியுள்ளது; இது, நாட்டின் எதிா்காலத்துக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும்’ என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

பொதுத் துறை நிறுவனமான பாரத் இம்யூனாலஜிக்கல்ஸ் மற்றும் பயாலாஜிக்கல்ஸ் நிறுவன (பிஐபிசிஓஎல்) ஊழியா்கள் உடனான தனது சந்திப்பு விடியோவைப் பகிா்ந்து, சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

‘நாட்டில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் ஒரே அரசு நிறுவனமான பிஐபிசிஓஎல், 2017 வரை லாபரகமாகச் செயல்பட்டது. பின்னா், திட்டமிட்டு இழப்புக்குத் தள்ளப்பட்டு, இப்போது தனியாா் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பொதுத் துறை நிறுவனங்களைப் பலவீனப்படுத்தி, அதன் சொத்துகளை தனது முதலாளித்துவ நண்பா்களுக்குத் தாரைவாா்க்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. பொதுத் துறை நிறுவனங்கள் ஒடுக்கப்படுவதும், தனியாா்மயமாக்கப்படுவதும் நாட்டுக்கு பெரும் சாபக்கேடு’ என்று ராகுல் விமா்சித்துள்ளாா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT