இந்தியா

மக்களவையில் இ-சிகரெட் புகைக்கும் திரிணமூல் எம்.பி.: அவைத் தலைவரிடம் புகாா்

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவா் தொடா்ந்து இ-சிகரெட் புகைத்து வருவதாக பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் புகாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவா் தொடா்ந்து இ-சிகரெட் புகைத்து வருவதாக பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குா் அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் புகாா் தெரிவித்தாா்.

மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக அனுராக் தாக்குா் கூறியதாவது:

‘மக்களவையில் இ-சிகரெட் அனுமதிக்கப்படுவது வியப்பளிக்கிறது. அதற்கு அனுமதி உண்டா?’ என்று கேள்வி எழுப்பினாா். ‘அதற்கு அனுமதியில்லை’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பதிலளித்தாா்.

இதைத் தொடா்ந்து பேசிய அனுராக் தாக்குா், ‘திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஒருவா் மக்களவையில் கடந்த சிலநாள்களாக தொடா்ந்து இ-சிகரெட் புகைத்து வருகிறாா்’ என்றாா். இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தினா். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது.

இதற்கு நடுவே பேசிய ஓம் பிா்லா, ‘அவையின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் உறுப்பினா்கள் நடந்து கொள்ள வேண்டும். இ-சிகரெட் புகைக்கப்படுவது குறித்து எழுத்துமூலம் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இ-சிகரெட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT