கேரள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று(டிச. 13) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி(எல்டிஎஃப்) கூட்டணி சற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் கூட்டணியான யுடிஎஃப் முன்னிலையில் இருந்து வருகிறது.
மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 439 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி 373 இடங்களிலும் பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் - 81, எல்டிஎஃப் - 63
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் - 8, எல்டிஎஃப் - 6
87 நகராட்சிகளில் யுடிஎஃப் - 55, எல்டிஎஃப் - 28, என்டிஏ - 2
6 மாநகராட்சிகளில் யுடிஎஃப் - 4 எல்டிஎஃப் - 1, என்டிஏ - 1 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
கேரளத்தில் அடுத்தாண்டு(சில மாதங்களில்) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருப்பது ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.