மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சால்ட் லேக் திடலில் நடைபெற்ற பெருங்குழப்பத்துக்கு மெஸ்ஸியிடமும் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மெஸ்ஸியைப் பார்க்க முடியாத ரசிகர்கள் சால்ட் லேக் திடலை சூறையாட, காவல்துறையினர் தடியடி நடித்து கலைத்தனர். இது இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.
மன்னிப்பு கேட்ட மமதா பானர்ஜி
இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது:
சால்ட் லேக் திடலில் இன்று நடைபெற்ற மோசமான ஏற்பாட்டிற்கு நான் மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் மெஸ்ஸியைப் பார்க்க திடலுக்கு வந்துகொண்டு இருந்தேன்.
இந்த எதிர்பாராத நிகழ்வுக்கு மெஸ்ஸி மற்றும் கால்பந்து ரசிகர்களிடம் நான் மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விசாரணை ஆணையம்
ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷிம்குமார் ராய் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கிறேன்.
இந்த ஆணையத்தில் தலைமைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலர், உள்துறை மற்றும் மலை அமைச்சர் நபர்களாகச் செயல்படுவார்கள்.
இந்த நிகழ்வு குறித்த முழுமையான விசாரணையை இந்த ஆணையம் மேற்கொள்ளும். யார் பொறுப்பு என்பதையும் இனிமேல் இந்த மாதிரி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கும் ஆணையம் விசாரிக்கும்.
விளையாட்டு ரசிகர்களிடம் மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.