முகப்பு
இந்தியா

அருணாசல்: விபத்து நிகழ்ந்த பள்ளத்தாக்கில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்பு

அருணாசல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன.

Updated On : 14 டிசம்பர், 2025 at 12:46 PM
விபத்து நிகழ்ந்த இடம்.
பகிர்:

அருணாசல பிரதேசத்தில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த இடத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன.

மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் டானி சலு வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை முதல் இதுவரை விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சனிக்கிழமை மாலை குறைந்த தெரிவுநிலை காரணமாக நாள் முழுவதும் தேடல் முடிவடைந்த பிறகு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழுவின் தேடல் நடவடிக்கை மீண்டும் தொடங்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

அருணாசல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் ஹயுலியாங்-சக்லகாம் மலைப் பாதையில் கடந்த திங்கள்கிழமை இரவில் சென்ற லாரி விபத்தில் சிக்கியது. 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், அடா் வனங்கள் நிறைந்த கரடுமுரடான பகுதி என்பதுடன் போதிய தொலைத்தொடா்பு வசதிகளும் இல்லாததாகும்.

பாஜக தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்!

விபத்தில் உயிா்பிழைத்த ஒருவா், எப்படியோ மீண்டு வந்து புதன்கிழமை தகவல் தெரிவித்த பிறகே அதிகாரிகளுக்கு இச்சம்பவம் குறித்து தெரியவந்தது. ஹோட்டல் கட்டுமானப் பணிக்காக, தின்சுகியாவில் இருந்து 22 தொழிலாளா்கள் லாரியில் சென்றபோது விபத்து நேரிட்டது.

summary

Three more bodies were retrieved on Sunday from the deep gorge in Arunachal Pradesh's Anjaw district, where a mini-truck with 22 labourers onboard from Assam fell, a senior official said.

முழு கட்டுரையைப் படிக்க →