தில்லி உள்பட வட மாநிலங்களின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு நிலவுவதால், மக்கள் வார விடுமுறையில் அருகிலிருக்கும் மலைப் பிரதேசங்களுக்கு அதிக எண்ணிக்கையில் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக, ஹிமாசலப் பிரதேசத்தின் ’குளு’ சுற்றுலாப் பயணிகள் வருகையால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
இந்த டிசம்பரில் குளு-மணாலிக்கு நாடெங்கிலுமிருந்து வருகை தந்த சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை 15,000க்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் சுற்றுலா துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தில்லியில் இந்த குளிர்காலத்தின் முதல் ‘குளிர் அலை’ இன்று(டிச. 20) பதிவானது. தில்லியில் இந்த ஆண்டில் இதுவரை இல்லாத குளிர் சீதோஷ்ணம் நிலவிய நாளாக சனிக்கிழமை(டிச. 20) பதிவாகியுள்ளது. மேக மூட்டமும் காற்று மாசுபாடும் ஒருங்கே அதிகரித்ததன் விளைவாக தில்லியில் மக்கள் எதிரே செல்லும் வாகனங்களை கணிப்பதிலும் காண்பதிலும் சிரமத்தைச் சந்தித்தனர். தில்லி விமான நிலையத்தில், அடர் பனிமூட்டம் எதிரொலியாக இன்று 129க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதீத குளிர் காரணமாக, உத்தரப் பிரதேசத்துக்கு சனிக்கிழமை(டிச. 20) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனிடையே, காஷ்மீரில் நிகழாண்டின் ‘சில்லாய் காலன்’ என்றழைக்கப்படும் தீவிர குளிர்காலம் ஞாயிற்றுக்கிழமை(டிச. 21) தொடங்கும் என்றும் வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பனிப்பொழிவு அதிகரிக்கும் என்றும் வெப்பநிலை கடுமையாகக் கீழிறங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.