கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் சுற்றுப்பயணத்துக்காக ரூ. 89 கோடி செலவிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவுக்கு கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி டிச. 13-ல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின்போது, சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸியை காண ரசிகர்களிடம் கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
ஆனால், மைதானம் வந்த மெஸ்ஸி, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து சென்று விட்டதாகக் கூறி, மைதானத்தை ரசிகர்கள் சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும், மைதானத்தினுள் மெஸ்ஸியை சூழ்ந்துகொண்டு, அவரைத் தொடுவதும் தழுவியணைப்பதும் அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக மெஸ்ஸி தரப்பினர் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகளவில் எப்படி கூட்டம் கூடியது என புலனாய்வுக் குழு விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் வங்கிக் கணக்கில் ரூ. 20 கோடிக்கும் அதிகமான தொகை இருப்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், சுற்றுப்பயண நிகழ்ச்சிக்காக மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, நிகழ்ச்சிக்காக அரசுக்கு வரியாக ரூ. 11 கோடியும் வழங்கப்பட்டது.
இந்த ரூ. 100 கோடியில் 30 சதவிகிதம் - டிக்கெட் விற்பனையிலும், மற்றுமொரு 30 சதவிகிதம் - ஸ்பான்சர்களிடமிருந்தும் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.