பாட்னாவில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண் மீது அமிலம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மொகாமாவில் அழகு நிலையம் நடத்தி வருபவர் 40 வயதுடைய பெண். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அழகு நிலையத்தை மூடிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு ஆண்கள் அவர் மீது அமிலம் வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பார்ஹ் போலீஸ் அதிகாரி ஆனந்த் குமார் கூறுகையில், அமில வீச்சில் பெண்ணின் முகத்தில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது நிலைமை ஆபத்தில் இல்லை.
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சம்பவத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டார். இச்சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.