ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்  
இந்தியா

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

புற்றுநோயாளிகளுக்கு ஆதரவு குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தின் சந்திரபூரில் பண்டித் தீனதயாள் புற்றுநோய் மருத்துவமனையின் தொடக்க விழாவில் பேசிய பாகவத்,

புற்றுநோய் நோயாளிகளை மட்டுமல்லாமல் அவர்களது கும்பங்களையும் கடுமையாகப் பாதிக்கிறது, அவர்களுக்குச் சேவை செய்ய சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேவையுள்ளவர்களுக்குச் சேவை செய்ய நமக்குப் பணம் தேவையில்லை, நேரம் மட்டுமே தேவை. கல்வி, சுகாதாரம் ஆகியவை ஒவ்வொரு தனிநபரின் தேவைகள். அவை பரவலாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

மனஅழுத்தம், மாசுபாடு, கலப்பட உணவு என எந்தவகையிலும் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். புற்றுநோய்க்கான காரணங்கள் குறிப்பிட்டவை அல்ல.

கடவுள் நமக்கு ஒரு உடலைக் கொடுத்திருக்கிறார், அதை மனிதக்குலத்திற்குச் சேவை செய்ய நாம் பயன்படுத்த வேண்டும். நாம் பணத்தை மட்டுமல்ல, நேரத்தையும் ஒதுக்க வேண்டும்.

புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உணர்ச்சிப்பூர்வமான வலிமையும் ஆதரவும் தேவை. புற்றுநோய் மருத்துவமனை போன்ற வசதிகள் திறம்படச் செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Rashtriya Swayamsevak Sangh (RSS) chief Mohan Bhagwat on Monday said affordable education and healthcare are the needs of every individual, and must be decentralised.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி மாதப் பலன்கள்: கன்னி

மார்கழி மாதப் பலன்கள்: சிம்மம்

மார்கழி மாதப் பலன்கள்: கடகம்

மார்கழி மாதப் பலன்கள்: மிதுனம்

நீதிக் கதைகள்! எல்லாம் நன்மைக்கே!

SCROLL FOR NEXT