வேலை தேடி விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை 2025இல் கணிசமாக உயர்ந்திருப்பதாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
அதன்படி, 2025இல் வேலைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விகிதம், அதற்கு முந்தைய ஆண்டைவிட 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. விண்ணப்பதாரர்களுள், பெண்களும் இளம் வயதினருமே அதிகமாக உள்ளனர்.
நிதி, நிர்வாகம், வாடிக்கையாளர் சேவை, சுகாதாரப்பிரிவில் துணைப் பணியிடங்கள் ஆகியவற்றில் வேலை தேடி விண்ணப்பிக்கும் பெண்கள் விகிதம் 36 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ‘இந்தியா அட் ஒர்க் 2025’ ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1 கோடி இளம் பருவத்தினர் பணியிடங்களில் சேர்கின்றனர். இந்த நிலையில், பணியிட ஆள்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் இந்த ஓராண்டில் சுமார் 9 கோடிக்கும் அதிகமாகப் பெறப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 3.8 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அவற்றுள், பெண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிட 36 சதவிகிதம் அதிகமாகும். பணியிடங்களில் பெண் பணியாளர்களுக்கான சம்பள உயர்வும் சராசரியாக 22 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.