தில்லி சென்றுள்ள பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இரண்டு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தில்லி சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று காலை சந்தித்துப் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது பிகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ள நிலையில் மாநில அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பேச நிதீஷ் குமார் தில்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபமாக முதல்வராக பதவியேற்ற பிறகு நிதீஷ் குமாரின் முதல் தில்லி பயணம் இதுவாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.