பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி மீது வழக்குப் பதிவு!
தில்லியில் பயணியைத் தாக்கிய விமானி மீது வழக்குப் பதிவு...
தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணியைத் தாக்கிய ஏர் இந்தியா விமானி வீரேந்தா் செஜ்வால் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தில்லி விமான நிலையத்தின் டி-1 முனையத்தில் அங்கித் திவான் என்ற பயணியை, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானி வீரேந்தா் செஜ்வால் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணி அங்கித் திவான், தனது முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் உள்ள புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிா்ந்தாா்.
Advertisement
Advertisement
இந்தச் சம்பவம் குறித்து விமான போக்குவரத்துப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஆகியவற்றிடம் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளது.
இதனிடையே, மத்திய அமைச்சகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, விமானியைப் பணியிடை நீக்கம் செய்த ஏர் இந்தியா நிறுவனம், விசாரணைக் குழுவை அமைத்தது.
இந்த நிலையில், விமானி வீரேந்தா் செஜ்வாலுக்கு எதிராக தில்லி விமான நிலைய காவல் நிலையத்தில் பிஎன்எஸ் 115, 126 மற்றும் 351 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
A case has been registered against the Air India pilot who assaulted a passenger!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.