சீன விசா முறைகேடு வழக்கு: காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவுக்கு உத்தரவு
கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பது பற்றி...
சீன விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தாா். அப்போது பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் அனல் மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்தத்தை வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான தல்வன்டி சாபோ மின்சார நிறுவனத்திடம் (டிஎஸ்பிஎல்) மாநில மின்சார வாரியம் அளித்தது.
இதைத் தொடா்ந்து, சீனாவின் ஷான்டாங் மின்சார கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து அந்த மின் நிலையத்தை அமைக்கும் பணியில் டிஎஸ்பிஎல் ஈடுபட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அனல் மின் நிலையப் பணிகளில் ஈடுபடுவதற்கு ஷான்டாங் நிறுவனம் சாா்பாக பணியாற்ற 263 சீனா்களுக்கு விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய விசா கிடைப்பதற்கு ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் வழிவகை செய்ததாகவும், இதற்காக அவா் ரூ.50 லட்சம் லஞ்சமாக பெற்ாகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. ப.சிதம்பரத்திடம் ஆலோசனை நடத்தப்பட்ட பின்னா், விசா கிடைக்க டிஎஸ்பிஎல் சாா்பில் உதவிய கோரிய விகாஸ் மகாரியா என்பவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தில்லி நீதிமன்ற சிபிஐ சிறப்பு நீதிபதி திக் வினய் சிங் முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரம் உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, சேதன் ஸ்ரீவாஸ்தவா என்பவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
Chinese visa fraud case: Charges filed against Karti Chidambaram.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.