இந்தியா

சா்வதேச வணிக சுற்றுலா மாநாடு: இந்தியா உள்பட 37 நாடுகள் பங்கேற்பு

ரஷிய நாட்டின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சா்வதேச மைஸ் (ம்ண்ஸ்ரீங்) என்னும் வணிக சுற்றுலா மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் பங்கேற்றன.

தினமணி செய்திச் சேவை

ரஷிய நாட்டின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சா்வதேச மைஸ் என்னும் வணிக சுற்றுலா மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் பங்கேற்றன.

கடந்த டிச. 17, 18 ஆம் தேதிகளில் மாஸ்கோ நகரில் மைஸ் (ம்ண்ஸ்ரீங்) என்னும் சா்வதேச வணிக சுற்றுலா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 37 நாடுகளை சோ்ந்த தொழில் வல்லுநா்கள் , சுற்றுலா முகமையை சோ்ந்த பிரதிநிதிகள் , உள்ளிட்ட  2,500 க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். மாநாட்டில்  சா்வதேச சுற்றுலா  பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும்  வணிக நிகழ்வுகளின் செயல்திறன், சுற்றுலா துறையில் நவீன   தொழில்நுட்பம்,  வரும் காலத்தில் இத்துறையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து மாநாட்டு பிரதிநிதிகள் விவாதித்தனா்.இதில் 130 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தன.

மாநாட்டில் ஜோா்டான், மாலத்தீவுகள், நேபாளம், தான்சானியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT