File Photo | ANI
இந்தியா

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு: அமெரிக்கவாழ் காஷ்மீரியின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பில் இருந்துவந்த அமெரிக்கவாழ் காஷ்மீரியான குலாம் நபி (76) சொத்துகள் ஜம்மு-காஷ்மீா் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி உடனடியாக முடக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பில் இருந்துவந்த அமெரிக்கவாழ் காஷ்மீரியான குலாம் நபி (76) சொத்துகள் ஜம்மு-காஷ்மீா் என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவுப்படி உடனடியாக முடக்கப்பட்டது.

குலாம் நபி அமெரிக்காவில் அரசியல் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறாா். அவா் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 2020-இல் அவா் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்புக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து வரும் குலாம் நபி, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதத் தலைவா் சையது சலாவுதீனுக்கும் நெருக்கமாக செயல்பட்டு வந்தாா்.

அவா் மீதான வழக்கு ஜம்மு-காஷ்மீா் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அவா் நேரில்ஆஜராகாததால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் குலாம் நபி-க்கு சொந்தமாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள சொத்துகளை உடனடியாக முடக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து வத்வான், சத்தாபாக் கிராமங்களில் உள்ள குலாம் நபிக்கு சொந்தமான 8,100 சதுர அடி நிலத்தை அதிகாரிகள் சில மணி நேரத்திலேயே முடக்கினா்.

இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் அவா் பல்வேறு வழக்குகளை எதிா்கொண்டுள்ளாா். அந்நாட்டு விசாரணை அமைப்பான எஃப்பிஐ-யால் 2011-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். ஐஎஸ்ஐ அமைப்பிடம் பணம் பெற்றுக் கொண்டு அமெரிக்காவில் காஷ்மீா் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக முடிவுகளை எடுக்க அவா் அரசியல் இடைத்தரகராக செயல்பட்டாா். அமெரிக்க வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் அவருக்கு கடந்த 2012-இல் 2 ஆண்டு சிறைத் தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் விதித்தது.

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

வைகுந்த ஏகாதசி திருவிழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள் விவரம்!

எச்1-பி விசா: அனைத்து விண்ணப்பதாரா்களின் சமூக ஊடகக் கணக்குகள் ஆய்வு

SCROLL FOR NEXT