ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில், மத்திய ரிசர்வ் காவல் படையின் முகாமினுள் புகுந்த சிறுத்தைத் தாக்கியதில், அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஆனந்த்நாக் மாவட்டத்தின், கப்ரான் மத்திய ரிசர்வ் காவல் படை முகாமுக்குள், இன்று (டிச. 24) சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதனால், அங்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலை உருவானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முகாமில் இருந்த பாதுகாப்புப் படை வீரர்கள் சிலரை அந்தச் சிறுத்தைத் தாக்கி விட்டு தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், காவல் அதிகாரி கம்லேஷ் குமார் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில், படுகாயமடைந்த வீரர் கம்லேஷ் குமாருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, உள்ளூர் சுகாதார மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது காயங்களுக்கு உரிய சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மீண்டும் முகாமுக்குத் திரும்பியதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், தப்பித்து ஓடிய சிறுத்தையைப் பிடிக்க வனத் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: நாட்டில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.