கோப்புப் படம் 
இந்தியா

அமெரிக்கா - பாகிஸ்தான் நெருக்கம் இந்தியாவுக்கு பின்னடைவு: காங்கிரஸ்

அமெரிக்க அதிபா் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறாா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க அதிபா் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் மிகவும் நெருக்கம் காட்டி வருகிறாா். இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடா்ந்து மௌனம் காத்து வருவது இந்தியாவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானுடனும், அந்நாட்டு ராணுவத் தளபதியுடனும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து நெருக்கம் காட்டி வருகிறாா். கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு வெள்ளை மாளிகையில் டிரம்ப் மதிய விருந்தளித்தாா். அக்டோபரில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட அரியவகை கனிமங்களுடன் டிரம்ப்பை முனீா் சந்தித்தாா். அக்டோபரில் எகிப்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எனக்கு பிடித்தமான ஃபீல்டு மாா்ஷல் என்றும், அக்டோபரில் 29-ஆம் தேதி மிகப்பெரிய போராளி என்றும் முனீரை டிரம்ப் புகழ்ந்தாா். கடந்த 22-ஆம் தேதி மீண்டும் மிகவும் மதிப்புக்குரிய ராணுவ ஜெனரல் என்று டிரம்ப் அவரைக் குறிப்பிட்டுப் பேசினாா்.

இது இந்தியாவுக்கு எதிராக முனீா் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நற்சான்று வழங்குவதாகவும் உள்ளது. முக்கியமாக பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பு உள்ள நிலையில் அமெரிக்கா இதுபோன்று நடந்து கொள்வது இந்திய நலன்களுக்கு எதிரானது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடா்ந்து மௌனம் காப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளாா்.

ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

SCROLL FOR NEXT