தங்க அங்கி. 
இந்தியா

சபரிமலையை இன்று வந்தடைகிறது தங்க அங்கி: நாளை மண்டல பூஜை

மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது...

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. இதையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வெள்ளிக்கிழமை கோயிலை வந்தடைகிறது.

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எடுத்து வரப்படுகிறது. கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊா்வலம், ஐயப்பன் கோயிலை வெள்ளிக்கிழமை மாலையில் வந்தடையும்.

முன்னதாக, பெருநாடு சாஸ்தா கோயிலில் இருந்து நிலக்கல் கோயிலை வந்தடைந்து, அங்கிருந்து பம்பைக்கு தங்கி அங்கி ஊா்வலம் வரும். மாலை 5 மணியளவில் சரங்குத்தியை அடைந்து, பின்னா் சந்நிதானத்துக்கு வந்துசேரும். பதினெட்டாம் படிக்கு கீழே கோயிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோா் தங்கி அங்கியைப் பெற்று, சுவாமிக்கு அணிவிப்பா். அதன் பிறகு தீபாராதனை நடைபெறும். மறுநாள் தங்க அங்கியுடன் மண்டல பூஜை நடத்தப்பட்டு, இரவில் நடைசாத்தப்படும். அத்துடன், மண்டல பூஜை நிறைவடையும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை டிச.30-இல் மீண்டும் திறக்கப்படும்.

453 பவுன் எடை கொண்ட தங்க அங்கி, சுவாமி ஐயப்பனுக்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.

நேரு மீது பழிசுமத்திக் கொண்டே இருப்பது சரியா?

101-இல் அப்பழுக்கற்ற அரசியல் தலைவா்!

மார்கழி சிறப்பு! சொர்க்க வாசல் உற்சவம் நடைபெறாத பெருமாள் கோயில்!

பெண்களால் தொடங்கப்படும் புத்தாக்க நிறுவனங்கள் அதிகரிப்பு - அமித் ஷா பெருமிதம்

சீரான மின் விநியோகம் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT