செய்யறிவு தொழில்நுட்பத்தால் வேலையை இழந்த ஐடி ஊழியர் நகைக்கடையில் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் ரௌ காவல் நிலையத்துக்குள்பட்ட நகைக்கடை ஒன்றில் நகைகள் திடுட்டு போனதாக கிடைத்த புகாரின் பேரில் காவல் துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
நகைக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தபோது 20 வயது மதிக்கத் தக்க முகமூடி அணிந்த இருவர் நகைக்கடையில் தங்கம், வெள்ளி, வைர ஆபரணங்களைக் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி கொள்ளையடித்துச் செல்வது கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவத்தில் மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபாலில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து காணாமல்போன நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன.
இதுதொடர்பாக காவல் துணை ஆணையர் ஸ்ரீகிருஷ்ணா லால்சந்தானி கூறும்போது, “இருவருக்கும் 18 வயதாகிறது. இருவரும் 2008 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான பன்டி ஆர் பப்ளி (Bunti Aur Babli) என்ற படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு அவர்கள் இந்தத் திடுட்டுச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். விசாரணையில், அந்த இளைஞர் ஐடி துறையில் பகுதி நேரமாக கிராஃபிக் டிசைனராக வேலை பார்த்து வந்துள்ளார்.
செய்யறிவு தொழில்நுட்பத்தால், அவர் வேலை இழந்ததாகவும் கடினமான சூழல் மற்றும் வாழ்க்கையை நடத்த திருட்டு வேலையில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
அவருடன் கைதுசெய்யப்பட்ட அவரது தோழி, நீட் தேர்வர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ. 16.17 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து விசாரணையில், நகையை விற்க முயன்றதாகவும், இவர்கள் குழந்தைகள் என நினைத்து போதிய விலை கிடைக்காது. கிறிஸ்துமஸ் கழித்து விற்பனை செய்யலாம் என்றும் அந்த இளைஞர் தெரிவித்தார்” என காவல் துணை ஆணையார் லால்சந்தானி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.