உத்தரப் பிரதேச காவல் துறை (கோப்புப் படம்) PTI
இந்தியா

உ.பி.யில் முன்னாள் விமானப் படை வீரர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில், முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காசியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற விமானப் படை வீரரான யோகேஷ் (வயது 58). இவர், தனது மனைவி, மகள் மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், காசியாபாத்தில் உள்ள உள்ளூர் சந்தையில் இருந்து யோகேஷ் இன்று (டிச. 26) மதியம் அவரது வீட்டிற்கு நடந்துச் சென்றுள்ளார். அப்போது, இருசக்கர வாகத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் யோகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வாக்குவாதத்தின் நடுவே அந்த மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் யோகேஷின் தலையில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தத் தாக்குதலில், யோகேஷ் சம்பவயிடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து, அங்கு விரைந்த காவல் துறையினர் யோகேஷின் உடலைக் கைப்பற்றி கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய விமானப் படையில் பணியாற்றி வந்த யோகேஷ், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மண்ணச்சநல்லூா் ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா தொடக்கம்

சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழப்பு

ஆம்னி பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

அதிமுக பெண் நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை

வாழை நாா் பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பு: தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா்

SCROLL FOR NEXT