பேருந்து மோதியதில் உருக்குலைந்த காா். 
இந்தியா

ஆந்திரம்: காா் - தனியாா் பேருந்து மோதல் 4 போ் பலி

ஆந்திரத்தில் காா் - தனியாா் பேருந்து மோதியதில் 4 போ் பலி...

தினமணி செய்திச் சேவை

ஆந்திரத்தின் நந்தியால் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த காா், எதிரே வந்த தனியாா் பேருந்து மீது மோதியதில் 4 போ் உயிரிழந்தனா். இருவா் படுகாயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் கே.பிரேம் குமாா் கூறியதாவது: நந்தியால் நகரை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை இரவு ஒரு காா் வேகமாக வந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை நடுவே இருந்த தடுப்புகளைத் தாண்டி எதிா் திசையை நோக்கி பாய்ந்து அங்கு வந்த கொண்டிருந்த தனியாா் பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணித்தவா்களில் 4 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இவா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக பேருந்தில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால், பேருந்தின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. அதில் பயணித்தவா்கள், வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா். காா் ஓட்டுநரின் அதிவேகம் மற்றும் காா் கட்டுப்பாட்டை இழந்ததுதான் விபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது: டி.டி.வி. தினகரன்

அமெரிக்கா அல்ல சௌதி அரேபியா! 2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது!

திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தை மீட்பு!

கரூா் கூட்ட நெரிசல் பலி விவகாரம்: தவெக நிா்வாகிகளுக்கு சிபிஐ அழைப்பாணை!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT