குடும்பத்துடன் புரி ஜெகநாதர் கோயிலில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படம் | தலைமைத் தேர்தல் அதிகாரி | @OdishaCeo
இந்தியா

ஒடிஸாவில் தலைமைத் தேர்தல் ஆணையர்: புரி கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், புரி ஜெகநாதர் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு...

இணையதளச் செய்திப் பிரிவு

ஒடிஸாவில் தலைமைத் தேர்தல் ஆணையர் :

புவனேசுவரம் : ஒடிஸாவுக்கு 3 நாள் பயணமாக சனிக்கிழமை(டிச. 27) சென்றடைந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், புரி ஜெகநாதர் கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். புவனேசுவரத்திலுள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை சென்றடைந்த அவர், நேராக முதலில் புரி கோயிலுக்குச் சென்றார்.

அங்கு வழிபாட்டை முடித்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “ஜெகநாதரை தரிசிக்க எமது குடும்பத்துடன் ஒடிஸாவுக்கு வருகை தந்துள்ளேன். மேலும், உள்ளூர் கலாசாரத்தைப் புரிந்துகொண்டு அனுபவம் பெறவும் இங்குள்ள வாக்குச்சாவபடி நிலை அலுவலர்களைச் சந்தித்து கலந்துரையாடவும் உள்ளேன். அவர்களே நமது தேர்தல் நடைமுறையின் தூண்களாவர்” என்றார்.

CEC begins 3-day Odisha tour, calls BLOs 'pillars of election process'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யு19 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! கேப்டன் யார் தெரியுமா?

‘சேலம் பொதுக்குழு தீா்மானங்கள் பாமகவை கட்டுப்படுத்தாது’

சல்மான் கானை நேரில் வாழ்த்திய தோனி! நள்ளிரவில் சுவாரசியம்!

கரை ஒதுங்கிய ராக்கெட் போன்ற மர்மப் பொருள்! தீவிர சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள்!

2025! காஸா முதல் காஷ்மீர் வரை... உலகம் போர்க்களமான கதை!

SCROLL FOR NEXT