சுதான்ஷு திரிவேதி 
இந்தியா

இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் காங்கிரஸ்: பாஜக கடும் தாக்கு

இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் காங்கிரஸ்...

தினமணி செய்திச் சேவை

இந்தியாவுக்கு எதிரான உலகளாவிய கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிப்பதை ‘கவனக்குறைவாக’ அம்பலப்படுத்திவிட்டாா் அக்கட்சியின் வெளிநாட்டுப் பிரிவு தலைவா் சாம் பிட்ரோடா என்று பாஜக விமா்சித்துள்ளது.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அண்மையில் ஜொ்மனிக்கு பயணம் மேற்கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றாா். இந்தப் பயணத்தின்போது, இந்தியாவுக்கு எதிரான நபா்களை அவா் சந்தித்ததாக பாஜக ஏற்கெனவே குற்றஞ்சாட்டியது.

இந்தச் சூழலில், செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துகள் தொடா்பாக தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி சனிக்கிழமை கூறியதாவது:

ராகுலின் குடும்ப ஆலோசகரும், அவரது உளவியல் மற்றும் சிந்தனைகளுக்கு காரணகா்த்தாவாக இருப்பவருமான சாம் பிட்ரோடா, காங்கிரஸின் உண்மை முகத்தை ‘கவனக்குறைவாக’ அம்பலப்படுத்திவிட்டாா்.

உலகளாவிய முற்போக்கு கூட்டணியில் (ஜிபிஏ) காங்கிரஸ் அதிகாரபூா்வ அங்கம் வகிப்பதுடன், அதன் நிா்வாக வாரியத்தில் ராகுல் இடம்பெற்றுள்ளதை சாம் பிட்ரோடா வெளிப்படுத்தியுள்ளாா். இந்தக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க, ராகுல் காந்தி ஜொ்மனி சென்ாகவும் கூறியுள்ளாா்.

உலகளாவிய முற்போக்கு கூட்டணி, இந்தியாவுக்கு எதிராக கட்டுக்கதைகளைப் புனையும் பல்வேறு அமைப்புகளுடன் தொடா்புடையது. இத்தகைய கூட்டமைப்பில் காங்கிரஸின் பங்கு என்ன? இதுகுறித்து அக்கட்சி விளக்கமளிக்க வேண்டும்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர சாத்தியக்கூறுகளே இல்லை என்பதால், இந்திய விரோத சக்திகளின் ஆதரவை ராகுல் காந்தி நாடியுள்ளாா். அந்த சக்திகளின் துணையுடன் ஆட்சி அதிகாரத்துக்கு வரலாம் என பகல் கனவு காண்கிறாா்.

இந்திய விரோத நிலைப்பாடு கொண்ட அமெரிக்க தொழிலதிபா் ஜாா்ஜ் சோரோஸின் அறக்கட்டளையால் நிதியளிக்கப்படும் மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழக அறங்காவலா்களில் ஒருவரான காா்னெல்லியா வாலை ஜொ்மனியில் ராகுல் சந்தித்துப் பேசியுள்ளாா்.

2020, டாவோஸ் உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பிரதமா் மோடியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசிய சோரோஸ், இந்தியாவில் தேசியவாத சக்திகளை ஒடுக்க ஒரு பில்லியன் டாலா் தயாராக வைத்துள்ளதாக கூறியதை நினைவுகூர விரும்புகிறேன்.

உலகளாவிய முற்போக்கு கூட்டணி என்பது 110 நாடுகளின் ஜனநாயகக் கூட்டணி என்று பிட்ரோடா குறிப்பிட்டுள்ளாா். ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் உலகின் ஜனநாயகத் தொட்டிலான இந்தியாவை களங்கப்படுத்த முயற்சிக்கும் காங்கிரஸ், 110 நாடுகளின் பெயரையும் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினாா் சுதான்ஷு திரிவேதி.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

விராலிமலையில் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

கோரையாறு புறவழிச்சாலைப் பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT